நான்கு மொழிகளில் வெளியாகும் மாநாடு டிரைலர் – நயன் கணக்கை போட்டு சிம்புவை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படத்தின் டிரைலர் வருகிற அக்டோபர் 2ம் தேதி நான்கு மொழிகளில் உள்ள திரை பிரபலங்களால் வெளியிடப்பட உள்ளது.

வெளியாகும் ட்ரைலர்:

தமிழ் திரை உலகத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. அண்மையில், இவரது நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படம் மாநாடு.  படப்பிடிப்பு முடிந்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இதன் ட்ரைலர் வருகிற 2ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ட்ரைலரை நான்கு மொழிகளிலும் புகழ்பெற்ற சினிமா பிரபலங்கள் வெளியிட உள்ளதாகவும், தமிழில் காலை 11.25 மணிக்கு இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வெளியிட உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.  இதை பார்த்த, நெட்டிசன்கள், 1+1+2+5=9 என அந்த நேரத்தை கூட்டி 9 வருவதால் நயன்தாராவிற்காக அந்த நேரத்தை தேர்வு செய்துள்ளதாக கூறி நடிகர் சிம்புவை வம்புக்கு இழுத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here