‘தேசிய விருது பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்’ – மு.க.ஸ்டாலின் ட்வீட்!!

0
stalin

சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற நடிகர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்திய அரசின் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருது நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. தென் இந்தியாவின் சிறந்த திரைப்படங்களுக்கான கேட்டகிரியில் பல விருதுகளை பெற்றுள்ளார்கள் தமிழ் திரையுலக பிரபலங்கள். அந்த வகையில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘அசுரன்’ படத்துக்காக இயக்குனர் வெற்றிமாறன் பெற்றுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிறந்த நடிகருக்கான விருதை அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் பெற்றுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக நடிகர் விஜய் சேதுபதி பெற்றுள்ளார். இசையமைப்பாளர் இமான் சிறந்த இசைக்கான விருதை பெற்றுள்ளார். தேசிய விருதுகளை பெற்றுள்ள நடிகர்கள், இசையமைப்பாளர் அனைவருக்கும் தமிழக திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் முதல் மனைவியா இது?? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்!!

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தேசிய விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அசுரன் வெற்றிமாறனுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். அர்ப்பணிப்புடன் உண்மையான உழைப்பை செலுத்துகிறவர்களுக்கு விருது. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here