தளபதி அடுத்த மூன்று வருடங்களுக்கு சினிமாவை விட்டு விலக இருப்பதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் புரட்டி போட்டு வந்த நிலையில், அதை சரிக்கட்டும் விதமாக தளபதி மகன் சஞ்சய் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதன் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் மகனை இசையமைக்க வைக்கலாம் என்று சஞ்சய் கூறியுள்ளார். ஆனால் அதற்கு தயாரிப்பு நிறுவனம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. அவர் வேண்டாம் என்றும் அனிருத்தை கமிட் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர் என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.