மாநிலத்தில் மாடுகளிடயே வேகமெடுக்கும் ‘லம்பி’ வைரஸ்.,,பால் மூலம் மனிதர்களுக்கு பரவுமா? அச்சத்தில் பொதுமக்கள்!

0
மாநிலத்தில் மாடுகளிடயே வேகமெடுக்கும் ‘லம்பி’ வைரஸ்.,,பால் மூலம் மனிதர்களுக்கு பரவுமா? அச்சத்தில் பொதுமக்கள்!

மகாராஷ்டிராவில், கால்நடைகளை லம்பி வைரஸ் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்போர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாநில கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

லம்பி’ வைரஸ்:

உலகம் முழுவதும், பொதுமக்களை தாக்கி அதிக பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது தான் குறைந்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தும் வகையில், குஜராத் மாநிலத்தில் கால்நடைகளைத் தாக்கும் தோல் நோய் (லம்பி வைரஸ்) மிக வேகமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக ஏராளமான கால்நடைகள் இறந்துள்ளது. குறிப்பாக குஜராத்தின் கச் மாவட்டத்தில் பெருமளவில் மாடுகள் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குஜராத்தை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவிலும் லம்பி வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் 126 மாடுகள் இறந்து உள்ளதாக, கால்நடை பராமரிப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வைரஸ் தாக்கப்பட்ட பசுக்களின் பாலை மனிதர்கள் பருகுவதால் இந்நோய் மனிதர்களுக்கு பரவாது என அறிவியலார்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்குமாறு மகாராஷ்டிரா கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் 25 மாவட்டங்களில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here