அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய க்ருணால் பாண்டியா…, 182 ரன்கள் குவித்த ஹைதராபாத்!!

0
அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய க்ருணால் பாண்டியா..., 182 ரன்கள் குவித்த ஹைதராபாத்!!

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து தனது 12 வது லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கே எல் ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதால், க்ருணால் பாண்டியா லக்னோ அணியை வழி நடத்தினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து தொடங்கப்பட்ட, இந்த போட்டியில் ஹைதராபாத்தின் அபிஷேக் சர்மா 7, ராகுல் திரிபாதி 20, அன்மோல்பிரீத் சிங் 36 ரன்கள் எடுத்து சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மேலும், க்ருணால் பாண்டியாவின் அசத்தலான பந்து வீச்சால், ஐடன் மார்க்ராம் 28, க்ளென் பிலிப்ஸ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அடேங்கப்பா.., நண்பன் படத்தில் நடித்த மில்லி மீட்டாரா இது.., ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரேப்பா – புகைப்படம் உள்ளே!!

இதனால், ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. இதில், அதிகபட்சமாக அப்துல் சமது 37* ரன்கள் எடுத்திருந்தார். மேலும், லக்னோ அணி சார்பாக க்ருணால் பாண்டியா 2, யுத்வீர் சிங், அவேஷ் கான், யாஷ் தாக்கூர் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here