லக்னோவை எதிர்கொள்ளும் விராட் கோலியின் RCB படை…, புள்ளிப்பட்டியலில் முன்னேற போவது யார்??

0
லக்னோவை எதிர்கொள்ளும் விராட் கோலியின் RCB படை..., புள்ளிப்பட்டியலில் முன்னேற போவது யார்??
லக்னோவை எதிர்கொள்ளும் விராட் கோலியின் RCB படை..., புள்ளிப்பட்டியலில் முன்னேற போவது யார்??

ஐபிஎல் தொடரில், இன்று விராட் கோலியின் RCB அணியானது கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

RCB vs LSG:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், இன்று விராட் கோலி இடம் பெற்றுள்ள RCB அணியானது, கே எல் ராகுலின் லக்னோ (LSG) அணியை எதிர்த்து போட்டியிட உள்ளது. இந்த போட்டியானது, லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, RCB அணியானது, டெல்லி, மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் என அடுத்தடுத்து, அந்நிய மண்ணில் விளையாட உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் RCB அணி, இதுவரை விளையாடிய 8 போட்டிகளில், தலா 4 ல் வெற்றி தோல்வி அடைந்து, 8 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளனர்.

இனி வரும் போட்டிகளில், RCB அணி அந்நிய மண்ணில் விளையாட இருப்பது, வீரர்களுக்கு அலைச்சலாக இருந்தாலும், வெற்றி என்பது முக்கிய தேவையாக உள்ளது. இதில், குறிப்பாக RCB அணியின் கேப்டனான ஃபாஃப் டு பிளெசிஸ் காயம் காரணமாக, இம்பாக்ட் வீரராக மட்டுமே செய்யப்பட்டு வருகிறார். இதனால், இன்றைய போட்டியிலும் விராட் கோலியை கேப்டனாக இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், லக்னோ அணியானது 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில், லக்னோ அணி வெற்றி பெற்றால், புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RCB அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

விராட் கோலி (சி), ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபு தேசாய், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் பட்டேல், வைஷாக் விஜய் குமார், முகமது சிராஜ்… ஃபாஃப் டூ பிளெசிஸ் (இம்பாக்ட் பிளேயர்)

LSG அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

கே எல் ராகுல் (சி), கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, நவீன்-உல்-ஹக், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், யாஷ் தாக்கூர்… அமித் மிஸ்ரா (இம்பாக்ட் பிளேயர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here