
நடிகர் சிம்பு நடிக்க இருந்து கொரோனா குமார் படத்தை பிரதீப் ரங்கநாதன் தட்டி பறித்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன்:
தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்சம் காலத்தில் முன்னணி இயக்குனராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2019ம் ஆண்டு ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு லவ் டுடே திரைப்படம் மூலம் பட்டிதொட்டியெல்லாம் ரீச் ஆகியுள்ளார். இப்போது இருக்கும் காதலை இந்த படத்தின் மூலம் அற்புதமாக கொடுத்திருக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
வெறும் 5 கோடியில் உருவான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் 75 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்து படக்குழுவினர் வெளியிட்டனர். அங்கயும் இந்த திரைப்படம் வெற்றி நடை போட்டு வந்த நிலையில், தற்போது இந்தியிலும் ரீமேக் செய்ய பிரதீப் ரங்கநாதன் ரெடியாகி உள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் தான் தயாரிக்கிறார். மேலும் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறாராம்.
ஐஸ்வர்யா டார்ச்சர் தாங்கல ., மேடையில் புலம்பி தள்ளிய தனுஷ்! விவாகரத்துக்கு அச்சாரமே இதான் போலயே!!
ஒரே படத்தால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் அனைவரையும் பிரதீப் ரங்கநாதன் இழுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் நடிகர் சிம்பு பத்து தல திரைப்படத்திற்கு பிறகு கொரோனா குமார் என்னும் திரைப்படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இப்போது இந்த திரைப்படத்தில் சிம்பு நடிக்கவில்லையாம். அதற்கு பதில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி சிம்பு படத்தை பிரதீப் ரங்கநாதன் பறித்துள்ளார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.