பூட்டிய கோவில் முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்

0
marriage
marriage

இன்று திருமணத்திற்கு ஏற்ற நாள் என்பதால் திருப்பரங்குன்றத்தில் பூட்டிய கோவிலில் மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.

கோவில் முன்பு தாலி கட்டிய மணமக்கள்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் வைகாசி மாதத்தில் திருமணங்கள் அதிகமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் திருமணங்களை தங்களது வீடுகளில் எளிமையாய் நடத்தி வருகின்றனர்.


அதை தொடர்ந்து திங்கள் கிழமையான இன்று வைகாசி முகூர்த்த நாள் என்பதால் தமிழகம் முழுவதும் திருமணங்கள் மிகவும் எளிமையாக சமூக இடைவெளியுடன் நடைபெற்றன. திருமணத்திற்கு ஏற்ற மாதம் வைகாசி என்பதால் அனைவரும் இந்த மாதத்தில் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொள்வார்கள்.

திருப்பரங்குன்றத்தில் இன்று முகூர்த்த நாள் என்பதால் சுமார் 25 க்கும் மேற்பட்ட மணமக்கள் கோவில் பூட்டி இருந்த போதிலும் திருமணம் செய்து கொண்டனர். வெளியே நின்றபடி மணமகன் மணமகளுக்கு தாலி காட்டினார். பின்னர் இருவரும் மாலை மாற்றி கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here