ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? இதை செய்தால் போதும்! எளிய வழிமுறைகள் இதோ!

0
ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? இதை செய்தால் போதும்! எளிய வழிமுறைகள் இதோ!
ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? இதை செய்தால் போதும்! எளிய வழிமுறைகள் இதோ!
ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? இதை செய்தால் போதும்! எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்கள் மலிவான விலையிலும் மற்றும் இலவசமாகவும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. உங்களின் ரேஷன் கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் அதனை திரும்ப எப்படி மீண்டும் திரும்ப பெறலாம் என்பது குறித்து பார்ப்போம்.

ரேஷன் கார்டு

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உணவு தேவையை பூர்த்தி செய்ய அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக விநியோகிக்கப்படுகிறது. ஆனால் பல்வேறு இடங்களில் தகுதியற்றவர்கள் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பெற்று கள்ள சந்தைகளில் விற்று அதிக லாபம் பெறுகின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக தகுதியானவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க வேண்டுமென தகுதியற்ற நபர்களுக்கு ரேஷன் கார்டு நீக்கப்பட்டு வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

உங்களின் ரேஷன் கார்டு எதிர்பாராதவிதமாக தொலைந்து விட்டால் மீண்டும் அதனை எப்படி பெறுவது என்ற குழப்பம் ஏற்படும். இதற்கு யாரை நாடுவது? எப்படி விண்ணப்பிப்பது என்பது உட்பட பல்வேறு குழப்பத்தில் இருப்பீர்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த அறிவிப்பில், ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சில நாட்களில் புதிய ரேஷன் கார்டு உங்களின் கைகளில் கிடைத்து விடும்.

ரேஷன் கார்டு மீண்டும் பெறுவதற்கான வழிமுறைகள்:

1. இதற்கு முதலாவதாக https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதில் உங்களின் பயனாளர் ID-ஐ பதிவு செய்ய வேண்டும்.

2. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

3. இந்த OTP எண்ணை உள்ளிட வேண்டும். அதன் பின் சுயவிவர பக்கம் தோன்றும்.

4. அதன் பிறகு TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் திறக்கப்படும்.

5. இதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட வேண்டும். அந்த படிவத்தை PDF வடிவில் சேமித்து பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

6. இந்த PDF படிவத்தை பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும். உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

7. இறுதியாக உங்களின் விவரங்கள் அதிகாரிகளால் சரி பார்க்கப்படும். சரியான விவரங்கள் இருப்பின் உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு ஒரு சில தினங்களில் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here