மஞ்சள் நிற சுடிதாரில் கண்ணை பறிக்கும் அழகில் பிக் பாஸ் லாஸ்லியா…!லைக்ஸ்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் லாஸ்லியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் மஞ்சள் நிற சுடிதாரில் மதிமயக்கம் அழகில் உள்ளார். இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.


செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் லாஸ்லியா. இலங்கையை பூர்விகமாக கொண்ட இவரை தமிழ் மக்களுக்கு நன்கு அறியவைத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில்  முதலில் யாரிடமும் ஒட்டாமல் இருந்த இவர் கமல் அவர்களின் வார இறுதி அறிவுரைக்கு பிறகு மெல்ல மெல்ல அனைவரிடமும் பழக ஆரம்பித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் கவினுக்கும் இடையே காதல் துளிர் விட்டது. இந்த காதல் அந்த நிகழ்ச்சியோடு முடிவுற்றது. அதன் பின்னர் இருவரும் தத்தம் தங்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அதாவது லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ஹர்பஜன் சிங்குடன் ஒரு படத்திலும், ஆரி மற்றும் தர்ஷன் உடன் தலா ஒரு படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். அதே போல் கவின் அவர்களும் ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

மேலும் தற்சமயம் லாஸ்லியா மேலும் பட வாய்ப்புகளை பெற கவர்ச்சி பக்கம் இறங்கி உள்ளார். அதாவது தான் நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் கலர் சுடிதாரில் மஞ்சக்காட்டு மைனாவாக கொள்ளை அழகில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அவரின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here