கண்ணை பறிக்கும் கொள்ளை அழகில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் உடன் பிக் பாஸ் லாஸ்லியா…!பிரமிப்பில் ரசிகர்கள்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில்  ஸ்லீவ்லெஸ்  ஜாக்கெட் உடன் படு அழகாக உள்ளார்.

இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இவரை தமிழ் மக்களுக்கு அறிய வைத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கென்று ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒரு ஆரமியே உருவானது. அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர். மேலும் அந்த சீரியலில் தன்னுடைய சகபோட்டியாளரான கவின் உடன் ஏற்பட்ட காதல் நீண்ட ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அப்பாவின் சந்திப்பு என அந்த நிகழ்ச்சியில் அவரின் பயணம் சோகம் சந்தோஷம் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்தது.


எனினும் தமிழ் ரசிகர்களின் ஆதரவு அவருக்கு எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு அவரை தேடி பட வாய்ப்புகள் வர தொடங்கியது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் கமிட்டான முதல் படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில்  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன், சதீஷ் எனப் பல பிரபலங்களோடு இணைந்து நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு சென்சார் விஷயமாக   பிரச்சனை ஏற்பட்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதன் பிறகும் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் இவர் தற்போது தர்ஷன் அவர்களுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தன்னுடைய நடிப்பு அனுபவங்களை பற்றி கூறுகையில், நடிக்க எனக்கு ஈடுபாடில்லை, தமிழில் தொகுப்பாளினியாக சான்ஸ் கிடைக்குமா என்று தான் இங்கு வந்தேன். ஆனால் எனக்கு ஒரு சீரியலில் கதாநாயகியாக நடிக்க தான் வாய்ப்பு வந்தது.

மேலும் அதன் பின்னர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு வந்ததாக தெரிவித்து உள்ளார். மேலும் நடிப்பது மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் அதற்காக தன்னை நிறைய மாற்றிக்கொண்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாவின் வாழ்க்கையே மாறியுள்ளது.


இந்நிலையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார். மேலும் சமீபகாலமாக அவர் கவர்ச்சியிலும் இறங்கி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் உள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here