டிச.27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம், சரக்கு புக்கிங் நிறுத்தம் – லாரி உரிமையாளர்கள் அதிரடி!!

0

தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லாரிகளுக்கான சரக்கு புக்கிங்கும் நிறுத்தப்படும் என்று சம்மேளன தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

லாரி ஸ்ட்ரைக்:

தமிழகத்தில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி முதல் லாரிகள் இயங்காது எனவும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவோம் என்று மாநில லாரிகள் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. வேக கட்டுப்பாடு, ஜிபிஎஸ் கருவியை குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்த கூடாது என்றும் காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும், போன்ற கோரிக்கைகளை முன் வைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

லாரி புக்கிங் நிறுத்தம்:

தற்போது லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி முதல் லாரிகளுக்கான சரக்கு புக்கிங்கும் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்ட் சம்மேளன தலைவர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்ட் சம்மேளன தலைவர் ராஜவடிவேலு சேலத்தில் நேற்று பேட்டியளித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் கூறியதாவது “தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி முதல் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி லாரி உரிமையாளர்கள் தங்களது காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் 26 ஆம் தேதி முதல் முழு லோடு மற்றும் சில்லறை லோடு போன்றவற்றை ஏற்றுவது நிறுத்தப்படும். மேலும் தமிழகம் முழுவதும் புக்கிங் சேவை நிறுத்தப்படும். அதாவது சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுமார் 5,250 மேற்பட்ட புக்கிங் ஏஜெண்டுகள் உள்ளது. இவை அனைத்திலும் லோடு ஏற்றுவது நிறுத்தப்படும்.

ரூ.10 முதல் 20 ஆயிரம் வரை., ஜன.1 முதல் குப்பைக்கு தனி கட்டணம்!!

இதனால் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பொருட்கள் தேக்கப்படும். மேலும் டீசல் விலையை மாநில அரசு 3 மாதங்களுக்கு ஒரு முறையே நிர்ணயம் செய்ய வேண்டும், ஏனெனில் தினமும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டால் லாரி வாடகையை நிர்ணயம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் லாரிகள் மீதான ஆன்லைன் அபராதத்தை நிறுத்த வேண்டும். எங்கள் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக் கொள்ளும் வரை காலவரையற்ற போராட்டம் நடைபெறும் ” என்று ராஜவடிவேலு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here