மின்வாரிய துறையில் 10,200 காலி பணியிடங்கள்.., அரசு தாமதிப்பது ஏன்??

0
மின்வாரிய துறையில் 10,200 காலி பணியிடங்கள்.., அரசு தாமதிப்பது ஏன்??
மின்வாரிய துறையில் 10,200 காலி பணியிடங்கள்.., அரசு தாமதிப்பது ஏன்??

மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அனைத்து தொழில் துறையும் தடையின்றி நடக்க முக்கியமான ஒன்றாக இருக்கிறது மின்சாரம். இந்த மின்சார நுகர்வு & விநியோகத்தில் ஏற்படும் பிரச்சனையை சரி செய்யும் பணிகளை மின்சார வாரியத்தின் கள பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் கள பணியாளர்கள் உட்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பொதுவாக இந்த பணியிடங்களுக்கான ஆட்களை தேர்ந்தெடுக்கும் பணியை மின்சார வாரியம் மேற்கொண்டு வருவது வழக்கம். ஆனால் 2021 ஆம் ஆண்டில் இருந்து பொது துறைக்கான பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை பணியாளர்கள் தேர்வாணையத்திற்கு அரசு கொடுத்து விட்டது. எனினும் கள பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை மட்டும் மின்சார வாரியத்திற்கு அரசாங்கம் கொடுத்துள்ளது.

CSK வில் வெடித்த புது பிரச்சனை.., யாருக்கு அந்த இடம்.., அணி நிர்வாகம் எடுக்கும் முடிவு என்ன??

அந்த வகையில் 10,200 கள பணியாளர்களை தேர்ந்தெடுக்க அனுமதி வழங்கும் படி ஆகஸ்ட் மாதம் மின்சார வரையும் அரசிடம் கேட்டிருந்தது. ஆனால் 9 மாதங்கள் ஆகியும் இதற்கான அனுமதி கிடைக்காததால், பணியாட்களை பணியமர்த்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கூடிய விரைவில் கள பணியாளர்களை மின்சார வாரியம் நியமிக்க வேண்டும் என்பது விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here