நடிகர் விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., லோகேஷ் வெளியிட்ட அப்டேட்…, 

0
நடிகர் விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., லோகேஷ் வெளியிட்ட அப்டேட்...,
நடிகர் விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., லோகேஷ் வெளியிட்ட அப்டேட்...,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 படத்தின் அப்டேட் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் 

பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நடிகர் விஜயின் ‘வாரிசு’ திரைப்படம் எக்கச்சக்கமான வசூலை குவித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில், நடிகர் விஜய் நடிக்கும் 67 ஆவது திரைப்படத்தை முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே நடிகர் விஜயை வைத்து ‘மாஸ்டர்’ என்ற பிளாக் பஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக் கூட்டணி, மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பது பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்நிலையில், தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் குறித்து காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கே.எல்.ராகுலுக்கு சர்பிரைஸ் கொடுத்த தோனி & கோலி…, திருமண பரிசாக கார், பைக்…, இதல்லவா நட்பு!!

அதாவது, தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் பிப்ரவரி மாதம் 1 முதல் 3 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கல்லூரி நிகழ்வு ஒன்றில் பேசும் போது, தளபதி 67 திரைப்படம் 100 சதவீதம் தன்னுடைய பாணியில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here