BRACE YOURSELF.., லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட லியோ படக்குழுவினர்!!

0
BRACE YOURSELF.., லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட லியோ படக்குழுவினர்!!
BRACE YOURSELF.., லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட லியோ படக்குழுவினர்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தை குறித்து படக்குழுவினர் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளனர்.

லியோ திரைப்படம்:

தற்போதைய சூழ்நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமே காத்து கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது லோகேஷ் கனகராஜின் லியோ தான். இப்படத்தில் நடிகர் விஜய் 40 வயது கேங்ஸ்டராக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் போஸ்டர்கள் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் இப்படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்று ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், லோகேஷ் – விஜய் காம்போவுக்காகவே வெயிட்டிங்கில் இருந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மிஷ்கின், கெளதம் மேனன் ஆகியோரின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், சமீபத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.

மீண்டும் சினிமாவில் இணையும் ரியல் ஜோடி.., படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!!!

அதாவது நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்புக்கு KGF பட புகழ் சஞ்சய் தத் கலந்து கொண்டுள்ள கிளிம்ஸ் வீடியோவை BRACE YOURSELF என்ற பெயரில் வெளிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. மேலும் இனிமேல் தான் ஆட்டமே இருக்கு என்று ரசிகர்களுக்கு வீடியோ மூலம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here