ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஓரம் கட்ட வரும் முக்கிய பிரபலம்.., தரமான டிவிஸ்ட் கொடுத்த லியோ படக்குழு!!

0
ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஓரம் கட்ட வரும் முக்கிய பிரபலம்.., தரமான டிவிஸ்ட் கொடுத்த லியோ படக்குழு!!
ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஓரம் கட்ட வரும் முக்கிய பிரபலம்.., தரமான டிவிஸ்ட் கொடுத்த லியோ படக்குழு!!

நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படம்:

தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே சென்சேஷன் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது தான் சொல்ல வேண்டும். அந்த ;அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரம் கடைசியாக 8 நிமிடம் வந்திருந்தாலும் தியேட்டரே அலறும் அளவுக்கு மாஸ் காட்டினார் சூர்யா. இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

விவாகரத்தான விஷ்ணு விஷாலின் முதல் மனைவிக்கு திருமணமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

இந்த நிலையில் விக்ரம் படம் போல் லியோவிலும் கடைசியாக கேமியோ ரோல் வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அந்த கேமியோ ரோலில் நடிகர் தனுஷ் நடிக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த தனுஷ் ரசிகர்கள் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here