வெட்டுக்கிளி வட்ட அலுவலகங்கள் மற்றும் மாநில அரசால், 11 ஏப்ரல் 2020 முதல் 23 ஜூலை 2020 வரை, ஆறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் ஒழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறப்பு குழுக்கள்
104 வெட்டுக்கிளி ஒழிப்பு குழுக்கள் மற்றும் 200 மத்திய அரசு ஊழியர்கள், வெட்டுக்கிளி ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். வான்வழி மருந்து தெளிக்கும் திறனையும் இப்பணியில் அதிகரித்துள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதிகளில் தேவைக்கேற்ப, ஹெலிகாப்டரரில் தெளிக்கும் முறையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. Mi-17 ஹெலிகாப்டரை பயன்படுத்தி, இந்திய விமானப் படை வெட்டுக்கிளி ஒழிக்க சோதனை செய்து வருகிறது.
பயிர்கள் சேதம்
குஜராத், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டிஸ்கர், பீகார் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் குறிப்பாக எந்த பயிரும் சேதமடைந்தது என்று குறிப்பிடபடவில்லை. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் சில சிறிய பயிர்கள் சேதமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெட்டுக்கிளிகள் ஒழிக்கும் பணிகள்
11 ஏப்ரல் 2020 முதல் 23 ஜூலை 2020 வரை, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள 2,02,565 ஹெக்டரிகளில் வெட்டுக்கிளிகள் ஒழிக்கும் பணிகள், வெட்டுக்கிளி வட்ட அலுவலகங்களால் மேற்கொள்ளப்பட்டன.
இது தெரியுமா உங்களுக்கு⇎⇎⇎‘கடத்தல் கும்பல் 12 மணி நேரத்தில் கைது’ போலீஸ்னா சும்மாவா!!
மேலும் 23 ஜூலை 2020 வரை, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள 1,98,657 ஹெக்டரிகளில் வெட்டுக்கிளிகள் ஒழிக்கும் பணிகள், மாநில அரசால் மேற்கொள்ளபட்டன.