தமிழகத்தில் டிச.31 முதல் அமலுக்கு வரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் – கடற்கரைகளில் தடை விதிப்பு!

0

தமிழகத்தில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக கடலூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் 2022ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு டிச.31 முதல் அம்மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கொண்டாட்டத்திற்கு தடை:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் அடுத்த தாக்குதலாக ஓமைக்ரான் தொற்று தீவிரம் எடுக்க தொடங்கியுள்ளது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த அதிக வீரியமுள்ள வைரஸாகும். இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் மீண்டும் தமிழகத்தில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஓமைக்ரான் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். கட்டாயம் மக்கள் தடுப்பூசிகளை செலுத்த அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தும் வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அம்மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விழா காலங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒன்று கூடுவதால் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது. அதனால் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் சமுதாய, கலாச்சார நிகழ்வு, அரசியல் கூட்டங்கள், போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here