ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

0
கொரோனா பரவல் எதிரொலி - மாநிலத்தில் இந்த 2 நகரங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்!!
கொரோனா பரவல் எதிரொலி - மாநிலத்தில் இந்த 2 நகரங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்!!

புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அந்த ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டித்து வருகிறது. தற்போது புதுச்சேரி அரசும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதன்படி  காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், கடற்கரை சாலை பகுதியில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா தளங்களில் 50 சதவிகித நபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை புதுச்சேரியில் சினிமா, தியேட்டர்கள், அனைத்து வகையான கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை புதுச்சேரியில் அமலில் இருக்கும். புதுச்சேரிக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு முன்னதாக அங்கு ஜூலை 16 ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவிருந்த நிலையில், தொற்று குறையாததாலும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்வி நிலையங்கள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடதக்கது. மேலும் புதுச்சேரியில் 2 நாட்களில் 19 குழந்தைகள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கட்டுள்ளதால் மூன்றாம் அலை குறித்த பயம் புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here