கை மீறும் கொரோனா பாதிப்பு: ஜூன் 15 வரை ஊரடங்கை நீடித்தது மேற்கு வங்க அரசு!!!

0

அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஜூன் 15 ஆம் தேதி வரை மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பதாக மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த ஊரடங்கில், அனைத்து அலுவலகங்களும் கல்வி நிறுவனங்களும் இயங்க அனுமதி இல்லை,அத்துடன் மெட்ரோ ரயில் உட்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் செயல்படாது. பெட்ரோல் பாங்குகள் மற்றும் வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும்.மளிகைக் கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் காலை 7 முதல் 10 வரை திறந்திருக்கும்.அதோடு கலாச்சார, அரசியல், கல்வி, அல்லது மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை.

மேற்கு வங்கத்தில் தற்போது வரை 1,23,377 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 14,827 ஆக பதிவாகியுள்ளது.இதுவரை அம்மாநிலத்தில் 13,18,203 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கத்தில் மே 30 வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் அந்த ஊரடங்கு தற்போது ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் அம்மாநில முதல்வர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை கடைசி வாரத்தில் நடைபெறும் எனவும், 10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். இந்த தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here