தமிழகத்தில் மேலும் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு..எதற்கெல்லாம் அனுமதி??

0

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு விடுத்துள்ளார். எனவே ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தமிழக அரசு கடந்த மே 24ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவித்தது. மே 31ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், முழு ஊரடங்கை ஜூன் 7ம் தேதி வரை மேலும் ஒருவாரம் நீட்டித்து என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கடுமையான ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை துரித படுத்தியதால், தற்போது தொற்று எண்ணிக்கை தினமும் 25,000 க்கும் குறைவாகவே தமிழகத்தில் பதிவாகி வருகிறது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்தது.

கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று அதிகரிக்கும் இந்த 11 மாவட்டங்களுக்கு தொற்றை கட்டுப்படுத்தும் வகையிலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் தனியாக கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எதற்கு அனுமதி??

  • காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை,காய்கறி கடைகள் செயல்பட அனுமதி
  • அனைத்து அரசு அலுவலங்களும் 30% பணியாளர்களுடன் செயல்படலாம்
  • இறைச்சிக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
  • காய்கறி,பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல் பட அனுமதி

  • மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்
  • சார் பதிவாளர் அலுவலகங்கள், ஒரு நாளைக்கு 50% டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திர பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் அரசு வழிமுறைகளை பின்பற்றி இயங்கலாம்

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு வருகிற ஜூன் 7 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒருவாரம் நீட்டிப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here