தமிழகத்தில் ஜூன் 28 ஆம் தேதிக்கு மேல் ஊரடங்கு நீடிக்கப்படுமா?? – முதல்வர் இன்று ஆலோசனை!!!

0

வரும் ஜூன் 28 ஆம் தேதி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு முடிவடைவதால் தமிழக முதலவர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருவதால் தமிழக அரசு ஒவ்வொரு வாரமும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. சென்ற வாரம் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில், பாதிப்பு அதிகம் உள்ள கோவை,  நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு பெரிய தளர்வுகள் ஏதும் அளிக்கப்படவில்லை. ஆனால் வகை 3 இல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

 

இம்முறை, வகை 2 இல் உள்ள அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. மேலும் இந்த மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள கடைகளுக்கு நேர நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல வகை 1 இல் அடங்கும் நகரங்களுக்கு புத்தகக கடைகள், காலணி விற்பனை கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், மின்னனு பொருள்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை முதல்வர் நடத்தும் ஆலோசனையில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். ஆலோசனை கூட்டம் முடிந்த பின் தளர்வுகள் குறித்த விவரங்களை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here