பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற நவம்பர் 16ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்து வருகிறது.

இதன் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. எனவே அந்நாளில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் நவம்பர் 25ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.