தமிழகத்தில் டிச.22ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 8ஆம் தேதி வேலை நாளாகும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பான பண்டிகை, கோவில் திருவிழாக்களை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அடுத்ததாக கடந்த 14ம் தேதி திருச்சி மாவட்டம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விழாக்களை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய வெளிமாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது நீலகிரியில் ஹெத்தையம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பிக்க கொண்டாடப்படும். அப்பகுதியில் வசிக்கும் படுகர் இன மக்கள் இப்பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அம்மாவட்டத்தில் உள்ள பேரகணி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணி, எப்பநாடு, கேத்தி பந்துமை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பர். 48 நாட்கள் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவர். இதில் முக்கிய நிகழ்வாக காரக்கொரை மடிமனையில் பூக்குண்டம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஹெத்தையம்மன் பண்டிகை ஆரவாரங்கள் இன்றி மிக எளிமையாக நடைபெற்றது. நடப்பு ஆண்டு அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகை கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசிய பணிகளுக்காக மட்டும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 8ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here