பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாளை விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!!

0

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் இருக்கும் வீரமாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடமாக கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு வீரமாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுவதால், நாளை நடக்க இருக்கும் இந்த திருவிழாவை சீறும் சிறப்புமாக கொண்டாட அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் இந்த திருவிழாவை குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சில அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் தாண்டவத்தால் மக்களால் வீரமாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு இந்த வருடம் அனைத்து மக்களும் கலந்து கொள்ளும் நோக்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டையில் இருக்கும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை என்று அறிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு பரவும் கொரோனா - கல்வித்துறை எடுக்க போகும் அதிரடி முடிவு? பெற்றோர் கருத்து!!

இதனால் மாணவர்கள் அனைவரும் இன்ப மகிழ்ச்சியில் மிதந்து வருகின்றன. இந்நிலையில் இந்த விடுமுறையை இது செய்யும் விதமாக உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு விடுப்பு நாட்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here