மார்ச் 7ல் இந்த பள்ளிகளுக்கு விடுமுறை.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!

0
மார்ச் 7ல் இந்த பள்ளிகளுக்கு விடுமுறை.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!
மார்ச் 7ல் இந்த பள்ளிகளுக்கு விடுமுறை.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் மாசி மாதங்களில் பிரசித்தி பெற்ற கோவில் ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மஹா சிவராத்திரி தினத்தன்று குலதெய்வம் மற்றும் சிவாலய வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 7ம் தேதி மாசிமக திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பௌர்ணமி நன்நாளில் நதி, குளம், கடல் போன்ற புனித நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடி கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வார்கள். குறிப்பாக புதுச்சேரி திருக்காஞ்சியில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ள படும். இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதி மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் இந்த வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.

குட்கா தடையை நீக்கி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை.., உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

எனவே இந்த மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 7ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் செய்முறை பொதுத்தேர்வு எழுதவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் கூறியுள்ளனர். எனவே இவர்கள் தவிர மற்ற பள்ளி மாணவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here