தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள்.. கூடுதல் அவகாசம் கேட்ட மாநில அரசு!!!

0
உள்ளாட்சி தேர்தல் தேதி - மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை...
உள்ளாட்சி தேர்தல் தேதி - மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை...

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சம்மந்தமாக அமைச்சர்கள் மற்றும் சில அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்: தமிழகத்தில் இன்று முதல் அமல்!!!
உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு…

2019 ஆம் ஆண்டு புதியதாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எதுவும் நடத்தப்படவில்லை, உள்ளாட்சி தேர்தலை 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக ஆட்சி நடத்த திட்டமிட்ட நிலையில் தொகுதிகளை மறுசீரமைக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் தேதி - மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை...
உள்ளாட்சி தேர்தல் தேதி – மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை…

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

2019ஆம் ஆண்டு புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் எதுவும் நடத்தப்படவில்லை. அதேபோல் தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசமும் முடிந்துவிட்டது. இதற்குமேல் காலதாமதமில்லாமல் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தேதி - மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை...
உள்ளாட்சி தேர்தல் தேதி – மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை…

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மு க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் மு க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இந்த ஆலோசனை கூட்டத்தில் இரு துறை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பெரியகருப்பன் கலந்து கொண்டனர் இவர்களுடன் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார்.உள்ளாட்சி தேர்தலை நடத்துவர்தற்க்கு இன்னும் கூடுதல் கால அவகாசம் அளிக்கமாறு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செயப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இருந்தாலும் நீதிமன்ற உத்தரவின்படி தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி தேர்தலின் முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும்,உள்ளாட்சி தேர்தலை நீதிமன்றம் கூறியுள்ள மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here