Friday, April 19, 2024

ஹிந்தி தெரியாததால் வங்கியில் கடன் தர மறுப்பு – மருத்துவருக்கு நேர்ந்த அவலம்!!

Must Read

ஹிந்தி தெரியவில்லை என்பதற்காக ஓய்வு பெற்ற மருத்துவருக்கு கடன் வழங்க முடியாது என்று வங்கி மேலாளர் கூறியதை அடுத்து கடன் கேட்ட மருத்துவர் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

கடன் கேட்டு விண்ணப்பம்:

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், இவர் ஜெயம்கொண்டாம் அரசு பொது மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மருத்துவத்துறையில் அவருக்கு 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அந்த பகுதியில் அவருக்கு சொந்தமாக வீடு மற்றும் நிலம் உள்ளது. இவர் அந்த பகுதியில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளார். அதனால் வங்கியில் கடன் கேட்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தான் கணக்கு வைத்துள்ளார். அதனால் அங்கு வங்கி மேலாளராக பணிபுரியும் விஷால் என்பவரிடம் சென்று கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கான உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.

மனஉளைச்சலுக்கு ஆளான பாலசுப்ரமணியம்:

கடன் தேவை குறித்தும் மேலாளரிடம் பேசியுள்ளார். ஆனால், அந்த மேலாளர் இவரிடம் ஹிந்தி தெரியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு இவர் ஹிந்தி தெரியாது என்றும் தனக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தான் தெரியும் என்று கூறியுள்ளார். அதற்கு விஷால் தான் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் பாலசுப்ரமணியம் கூறுவது புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கில்லி மற்றும் தூள் படத்தில் நடித்த ரூபன் கொரோனாவால் உயிரிழப்பு – திரையுலகினர் இரங்கல்!!

பாலசுப்ரமணியமும் பல முறை நேரில் சென்று பார்த்தபோதும் இதே பதிலை கூறியுள்ளார். இதனால் பாலசுப்ரமணியம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதனால், வங்கி மேலாளர் விஷாலுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். இது குறித்து விஷாலிடம் கேட்டதற்கு அவர் “என்னிடம் பலரும் தினமும் கடன் வேண்டும் என்று வருகின்றனர். இவரை பற்றி எனக்கு தெரியாது, ஞாபகம் இல்லை” என்று  பாலசுப்ரமணியம் அளித்துள்ள குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.  இது தொடர்பாக வங்கி நிர்வாகம் மேலாளரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -