
இந்தியாவின் வர்த்தக துறை வளர்ச்சிக்கு வித்திட்டு வரும் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சர்வதேச மகளிர் தினமான நேற்று நாடு முழுவதும் பல பகுதிகளில் நடைபெற்றது. இதில் பெருநகரங்களை போல் கிராமப்புற பெண்களும் வர்த்தக துறையில் சிறந்து விளங்க வேண்டும் என பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் பெண் தொழில் முனைவோருக்கான “வீ மிஷன் கேரளா” திட்டத்தில் பல்வேறு சலுகைகளை கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் அறிவித்துள்ளார். அதன்படி தொழில் நிறுவனங்களை தொடங்க உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக இரட்டிப்பாக்க பட்டுள்ளது. அதேபோல் 6 மாதத்தில் இருந்து திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகையை ஒரு வருடத்திற்கு பிறகு கட்ட துவங்கலாம் என உன்னதமான சலுகையை தெரிவித்தார்.
மேலும், வருகிற ஏப்ரல் மாதம் முதல் தொடங்க உள்ள இந்த திட்டங்களில் மகளிர் கூட்டுறவு சங்கங்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். கோழிக்கோட்டில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பாதையான இன்குபேஷன் மையமும் 50% வாடகையுடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அரசின் இதுபோன்ற சூப்பர் திட்டத்திற்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.