தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.., அரசிடம் கோரிக்கை விடுத்த ஜி.கே.வாசன்!!

0
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.., அரசிடம் கோரிக்கை விடுத்த ஜி.கே.வாசன்!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.., அரசிடம் கோரிக்கை விடுத்த ஜி.கே.வாசன்!!

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியல் சமூக இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், அவர்களை தாக்கி அவர்களின் உடமைகளை பறித்ததுடன் அவர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த 6 பேரை காவல்துறை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில் இந்த சம்பவம் குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, இதுமாதிரியான சம்பவம் நடக்க மூலகாரணமாக இருந்து வருவது இந்த மது பாட்டில் தான். அதனால் தான் பல இடங்களில் கொலை, கொள்ளை,திருட்டு, பாலியல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களே…, தொடர் விடுமுறைக்காக சிறப்பு ஏற்பாடு…, போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here