பிரபல இளம் பாடகர் 20 வயதில் திடீர் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்!!!

0
ATLANTA, GA - MARCH 11: Rapper Lil Loaded performs during The PTSD Tour In Concert at The Tabernacle on March 11, 2020 in Atlanta, Georgia.(Photo by Prince Williams/Wireimage)

புகழ் பெற்ற அமெரிக்க பாடகரான லில் லோடட் தனது 20 வயதில் இறப்பை தழுவியுள்ளார். இவரது இறப்பிற்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இவரது இறப்பு இவரது ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லில் லோடட், இவர் 20 வயதான புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் ஆவர். இவரது இயற்பெயர் டாஷான் ராபர்ட்சன். இவர் ஏற்கனவே தனது நண்பர் கலீல் வாக்கரை சுட்டுக் கொன்றது தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவரது “6locc 6a6ym” பாடல் யூடியூப்பில் 29 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் கடந்துள்ளது மற்றும் அமெரிக்காவின் ரெக்கார்டிங் இன்டஸ்ட்ரி அசோசியேஷனால் தங்க சான்றிதழை பெற்றது. இவரது “Gang Unit” என்ற மற்றொரு பாடல் 39 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் யூடியூபில் கடந்துள்ளது.

தற்போது இவரது இறப்பு செய்தி இசை பிரியர்களை அதிரிச்சியில் உறையவைத்துள்ளது. அவரது வழக்கறிஞர் அஷ்கன் மெஹ்ரியாரி, இவரது மரணத்தை பற்றி ஊடங்களுக்கு தெரிவித்தார். இவரது இறப்பிற்கான தெளிவான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here