
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து சில முக்கிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வயலில் வேலை பார்த்த பெண்களுக்கு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மருங்காபுரி அருகேயுள்ள வகுத்தாழ்வார் பட்டியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் சக தொழிலாளிகளான மணிமேகலை, மற்றும் பெரியம்மாள் ஆகியோருடன் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சின்ன கோனார் பட்டியில் உள்ள வயல்வௌி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
வேலை பார்ப்பதால் அவர்களுடைய மொபைல் போனை தங்களது இடுப்பு சேலைக்கு இடையில் வைத்துள்ளனர். அந்த சமயத்தில் பெண் ஒருவர் இடுப்பில் சொருகி வைத்திருந்த மொபைல் போனில் திடீரென மின்னல் தாக்கியதில் அந்த மொபைல் போன் வெடித்து சிதறியதால் மூன்று பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த மூன்று பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.