அரசுப்பள்ளிகளில் மார்ச் 20, 21ம் தேதிகளில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை முடிவு!!!

0
அரசுப்பள்ளிகளில் மார்ச் 20, 21ம் தேதிகளில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை முடிவு!!!
அரசுப்பள்ளிகளில் மார்ச் 20, 21ம் தேதிகளில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை முடிவு!!!

அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு புரிந்து படிக்கும் திறனை வளர்க்கும் விதமாக கொண்டு வரப்பட்ட “எண்ணும் எழுத்தும்” திட்டத்தின் தாக்கத்தை மக்களுக்கு உணர்த்த புதிய ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

எண்ணும் எழுத்தும்

தமிழகத்தில் குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவரும் அடிப்படை கல்வியாவது பயில வேண்டும் என பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை கற்றுக்கொடுப்பதற்காக கடந்த ஆண்டு “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இத்திட்டத்தால் பயன்பெற்று வரும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தை பெற்றோர்களிடம் தெரிவிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் “எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்’” என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை மார்ச் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

சுற்றுலா பயணிகளே உஷார்.., கொடைக்கானலில் இந்த பகுதிக்கு செல்ல தடை.., வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார அலுவலர்கள் தலைமையில் தன்னார்வலர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பேனர், தேநீர், சிற்றுண்டி உள்ளிட்ட செலவினங்களுக்கான பட்டியலை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here