தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஐகானிக் ஹீரோவாக இருந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் லியோ. பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. இதுவரை இப்படம் 544 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது.

அதில் விஜய் பேசிய வார்த்தைகள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில் லியோ சக்ஸஸ் நிகழ்ச்சி குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் சக்சஸ் மீட் வீடியோ வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் தளபதி குட்டி ஸ்டோரியை கேட்க தற்போது இருந்து ஆவலுடன் இருந்து வருகின்றனர்.