வித்தியாசமான சுவையுடன் “லெமன் ஃபிஷ்” – வீக்எண்டு ஸ்பெஷல் ரெசிபி!!

0

வீக் எண்டு என்பதால் கண்டிப்பாக அனைவர் வீட்டிலும் அசைவம் தான் சமைப்பர். அந்த வகையில் இன்று மீனை வைத்து சற்று வித்தியாசமாக செய்யப்படும் “லெமன் ஃபிஷ்” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • வாவல் மீன் – 2 துண்டுகள்
  • அரிசி மாவு – 4 டீஸ்பூன்
  • பூண்டு – 2 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 2 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
  • எலுமிச்சை சாறு – 4 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • வெண்ணை – 3 டீஸ்பூன்

செய்முறை

முதலில், மீன் துண்டுகளை நன்றாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், அதில் உப்பு மற்றும் மிளகு தூள் ஆகியவற்றை நன்றாக தடவ வேண்டும். பின், ஒரு தட்டில் அரிசி மாவினை போட்டு அதில் எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை பிரட்டி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எண்ணெய் சூடானதும், அதில் எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்க்க வேண்டும், இவை இரண்டும் நன்றாக பொன்னிறமாக மாறும் வரை பார்த்து விட்டு அதில் எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்க்க வேண்டும். மீன் நன்றாக பொன்னிறமாக மாறிய பின்பு, அதில் எலுமிச்சை சாறு, வெண்ணை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

அந்தகன் பட ஷூட்டிங்கில் வனிதா செய்யும் அட்டகாசங்கள் – வைரலாகும் வீடியோ!!

இதற்கு மேலே கொத்தமல்லியை சேர்த்து கொள்ள வேண்டும். வெண்ணை நன்றாக கரைந்து மீன் வெந்ததும், தீயினை அணைத்து விட்டு மீன் துண்டுகளை சூடாக பரிமாறவும். அவ்ளோ தான்!!

வித்தியாசமான சுவையுடன் “லெமன் ஃபிஷ்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here