லெஜண்ட்ஸ் லீக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி…, 20 ரன்னால் வாய்ப்பை தவற விட்ட ஆசியா லென்ஸ்!!

0
லெஜண்ட்ஸ் லீக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி..., 20 ரன்னால் வாய்ப்பை தவற விட்ட ஆசியா லென்ஸ்!!
லெஜண்ட்ஸ் லீக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி..., 20 ரன்னால் வாய்ப்பை தவற விட்ட ஆசியா லென்ஸ்!!

லெஜண்ட்ஸ் லீக்கில், ஆசியா லென்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

லெஜண்ட்ஸ் லீக்:

லெஜண்ட்ஸ் லீக் தொடரின் 3 வது சீசன் கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 10ம் தேதி முதல் 3 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியானது ஆசியா லென்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இதில், வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தால், இரு அணிகளும் இந்த போட்டியின் வெற்றியை எதிர்நோக்கி விளையாடினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை குவித்திருந்தது. வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி சார்பாக, ஹாசிம் ஆம்லா (68), ஜாக் காலிஸ் (56) என அரைசதம் விளாசி அசத்தி இருந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஆசியா லென்ஸ் அணியில், உபுல் தரங்கா 4, திசர பெரேரா 12, முகமது ஹபீஸ் 13 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

WPL 2023: 2 வது வெற்றியை பதிவு செய்த குஜராத் ஜெயண்ட்ஸ்…, பலம் வாய்ந்த டெல்லி அணியை வீழ்த்தி அசத்தல்!!

இதனால், 19.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆசியா லென்ஸ் அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்து, வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் விளைவால், வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதையடுத்து, ஆசியா லென்ஸ் அணி நாளை இந்திய மஹாராஜாஸ் அணிக்கு எதிராக எலிமினேட்டர் சுற்றில் விளையாட உள்ளது. இதில் வெல்லும் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here