பிரிட்டிஷ் காலத்து ரகசியம் – சட்டமன்றத்தில் பழம்பெரும் சுரங்க பாதை கண்டுபிடிப்பு!!

0

பிரிட்டிஷார் காலத்து ரகசிய சுரங்கப்பாதையை டெல்லி சட்டமன்றத்தில் கண்டுபிடித்துள்ளனர். இதன் வழியாக டெல்லி செங்கோட்டை வரை செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது.

செங்கோட்டை புதிய சுரங்கப்பாதை:

நமது முன்னோர்களின் காலத்தில் உள்ள பழம்பெரும் பொருட்களை தேடி ஆராய்ந்து அதை பாதுகாத்து வரும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மேலும், இதற்காகவே தனி கல்வி துறையை அறிமுகப்படுத்தி அதற்கு தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இதில் நமது பெருமையை போற்றக்கூடிய வகையில் உள்ள நமது முன்னோர்களின் பொருட்களை மியூசியம் போன்ற இடங்களில் பத்திரமாக வைத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட பல பொக்கிஷங்களை நம் நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாட்டை விட்டு செல்லும் போது கொள்ளையடித்து சென்றதாகவும் கூறப்பட்டுகிறது. அதில் சில இன்றும் நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கின்றது, ஆனால் நமக்கு தான் அது தெரியவில்லை. நம் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷார் நம் நாட்டில் ரயில் பாதை, கட்டடங்கள் கட்டிருந்து வரலாற்று சான்றுகளின் மூலம் அறியப்படுகிறது.தற்போது பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை ஒன்று டெல்லி சட்டமன்றத்தில் இன்று கண்டு பிடித்தனர். இந்த பாதையானது சுதந்திரத்திற்கு முன்னர் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பாதையை தொடர்ந்ததில் 6 கி.மீ தூரம் பயணித்தால் டெல்லி செங்கோட்டையை அடைவதாக தெரியவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த சுரங்க பாதையை அடுத்த சுதந்திர தினத்திற்குள் புதுப்பிக்கப்பட்டு காட்சி படுத்தப்படும் என்று சபாநாயர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here