லெஜண்ட் அண்ணாச்சி-யால மட்டும் தான் இதெல்லாம் முடியும் – ஒரே பதிவில் மொத்தமும் குளோஸ்!!

0
லெஜண்ட் அண்ணாச்சி-யால மட்டும் தான் இதெல்லாம் முடியும் - ஒரே பதிவில் மொத்தமும் குளோஸ்!!

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் அருள் சரவணன், தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அண்ணாச்சி போட்ட பதிவு:

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் அருள் சரவணன், அண்மையில் தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஜேடி-ஜெர்ரி ஆகியோரது இயக்கத்தில் உருவாகி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. என்ன நடந்தாலும் நடிப்பை மட்டும் நிறுத்தப் போவதில்லை என்பதில் சரவணன் அண்ணாச்சி உறுதியாக இருந்தார். இந்த நிலையில், தனது தி லெஜண்ட் படத்தை ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைக்காக ரூ.45 கோடிக்கு விற்றதாக தகவல் கிடைத்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது சரவணன் அண்ணாச்சி மாலையும் கழுத்துமாக தான் நிற்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, வெற்றி நாயகனாக மாற்றிய மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இந்த ரண களத்தில் கூட உங்களால் மட்டும் தான் இந்த மாதிரி பதிவிட முடியும் எனக்கூறி பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here