லெஜன்ட் சரவணனை சந்தித்த சூப்பர் ஸ்டார் – வைரலாகும் புகைப்படம்!!

0
ls

லெஜண்ட் சரவணன் நடித்து வரும் புதிய படத்தின் அப்டேட்டுகள் அன்றாடம் வெளிவந்த நிலையில் இருக்கிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லெஜண்ட் சரவணன் ஷூட்டிங்கின் போது அவரை சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

லெஜண்ட் சரவணன்

தமிழ் திரையுலகில் தற்போதைய சென்சேஷனல் செய்தியாக இருப்பது லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய திரைப்படம் தான். தமிழக மக்களால் அறியப்படும் தொழிலதிபர் தான் இந்த லெஜண்ட் சரவணன். பிரபல சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர். இந்த சரவணா ஸ்டோர்ஸின் விளம்பர படங்களில் தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் நடித்து வந்தார் சரவணன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்பு திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென கூறியிருந்தார் லெஜண்ட் சரவணன். இந்த வயதில் ஹீரோவாக நடிப்பதெல்லாம் தேவையா, நடிகையுடன் டூயட் பாட அவ்வளவு ஆசையா என்ற பல கேலிகளுக்கு பின்னாலும் லெஜண்ட் சரவணன் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.

தல அஜித்தோட மாமனாரை பார்த்து இருக்கீங்களா?? அப்போவே வேற லெவலில் இருக்கிறாரே!!

அந்த வகையில் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் நடித்து வருகிறார் லெஜண்ட் சரவணன். சமீபத்தில் லெஜண்ட் சரவணன் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் ஆக்சன் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தொடர்ந்து இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதுல்லா நடித்து வரும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நடந்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற லெஜண்ட் சரவணன் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here