இந்திய பந்து வீச்சாளர் திடீர் ஓய்வு அறிவிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!

0
இந்திய பந்து வீச்சாளர் திடீர் ஓய்வு அறிவிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்!
இந்திய பந்து வீச்சாளர் திடீர் ஓய்வு அறிவிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவுக்காக ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடிய லெக் ஸ்பின்னர் ராகுல் ஷர்மா அனைத்து வகை கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் ஓய்வு:

இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் ராகுல் சர்மா அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் தொடருக்காக பல போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் இந்தியாவில் நடைபெறும் IPL தொடர்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 2010 ஆம் ஆண்டும், 2011-2013 வரை புனே வாரியர்ஸ், 2014இல் டெல்லி டேர்டெவில்ஸ், 2015 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் இவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் புனே அணிக்காக விளையாடி, சிறந்த எகானமியுடன் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த சீசன் அவருக்கு திருப்புமுனையாக அமைந்ததோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இந்நிலையில் லெக் ஸ்பின்னர் ராகுல் சர்மா அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை ராகுல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அவர் நான் ஓய்வை அறிவிக்கும் நாள் வந்துவிட்டது. எனவே எனது ஓய்வின் மூலம் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட், வி வி எஸ் லட்சுமண், வீரேந்திர சேவாக், எம் எஸ் தோனி, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள் என கூறி ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இவர் அடுத்ததாக வெளிநாட்டில் நடக்க உள்ள லீக் போட்டிகளிலும் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here