தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணி விடுப்பு – தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு!

0
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணி விடுப்பு - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணி விடுப்பு - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணி விடுப்பு – தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு!

தமிழகத்தில் பொது மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கான பணி விடுப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் வழங்கியுள்ளார். மேலும், தற்காலிக ஆசிரியர்கள் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி விடுப்பு:

தமிழகத்தில் உள்ள ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் வீடு தேடி சென்று கல்வி வழங்கும் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனிடையே, தொடக்க கல்வி இயக்க நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதலின் படி தற்காலிக இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் அதற்கான விவரங்களை சரியாக பூர்த்தி செய்து நாளை பிற்பகல் 4 மணிக்குள் [email protected] என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பும்படி முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், 2021-2022 ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி ஆணை பெற்று மாறுதல் பெற்ற ஈராசிரியர் (பதிலி ஆசிரியர்கள்) வருகையின்மை காரணமாக பள்ளியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருந்தால், அப்பணியிடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பின் அந்த மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணி விடுப்பு செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here