Wednesday, March 27, 2024

யோகா முத்திரைகளும்- பயன்களும் !!

Must Read

இன்னைக்கு இருக்குற இக்கட்டான சூழல்ல நமக்கு ஒரு அவசரம்னா மருத்துவமனைக்கு செல்றதுக்கு கூட பயம்தாங்க இருக்கு.. எப்போ பரவும் எப்படி பரவும்னு சொல்லமுடியாத அளவுல பரவுது இந்த கொரோனா. அப்போ நாம எப்படிதா நம்மல பாதுகாப்பது ???

அதற்காகத்தான் நாம் இன்றைக்கு யோகா முத்திரைகளைப் பார்க்க போகிறோம்

யோகா!!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம். இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே.

மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு, இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

முத்திரையும், பயன்களும் :

கப நாச முத்திரை:

முதலில் சுண்டு விரலை மடக்கவும். மோதிர விரலை சுண்டுவிரலின் பாதி அளவிற்கு மடக்கவும். கட்டைவிரலை மோதிர விரலின் முதல் முட்டியிலும், சுண்டுவிரலின் இரண்டாவது முட்டியிலும் படும்படி அழுத்திப் பிடிக்கவும்.

மேலும் பார்க்க ⇛⇛ ரஷ்யாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி சோதனை தொடக்கம்..!

இவ்வாறு 30 வினாடிகளிலிருந்து 15 நிமிடம் வரை பயிற்சி செய்தால் மேலே குறிப்பிட்ட நோய்கள் நீங்கும்.

kapha-naashak-mudra
kapha-naashak-mudra
பயன்கள்

ஆயுர்வேதத்தின் படி பித்த நாடி குறைந்து, கப நாடி கூடினால், சுறுசுறுப்பின்மை, உடல் அதீத குளிர்ச்சி அடைதல், தன்னம்பிக்கை இழத்தல், ஜீரணக் கோளாறு, நீண்ட நேரம் செரிமாணம் ஆகாமல் இருத்தல், தாகமின்மை, மாதவிடாய் கோளாறு, தைராய்டு சுரப்பியின் குறைவான செயல்பாடு (ஹைபோ தைராடிசம்),அதிகச் சளித் தொந்தரவு, ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல், கண்நோய்கள், உதாரணமாக கண்களில் அதிக நீர் சுரத்தல், பூளை கட்டுதல் போன்றவை, ரத்த ஓட்டம் சீராகஇல்லாமை, அதிக எடை, போன்ற நோய்குறிகள் ஏற்படும். இதை போக்குவது இந்த கப நாச முத்திரை.

முகுள முத்திரை

நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்த்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.

mukula-mudra
mukula-mudra
பயன்கள்

நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையும்.

கணேச முத்திரை

வலது உள்ளங்கை மார்பு பகுதியை பார்த்தவாறு இருக்க வேண்டும்.இடது கை விரல்களால் இறுகப் பற்றி சங்கிலிபோல் இனைக்க வேண்டும். 6 முறை சீரான சுவாசம் விட்டு செய்தபின் இடது உள்ளங்கை மார்பை பார்த்தபடி வைத்து செய்ய வேண்டும்.

Ganesha-mudra
Ganesha-mudra
பயன்கள்

இரத்தம் சுத்தமாகி இரத்த ஓட்டம் சீராகும். இதயம்,நுரையீரல் நன்கு செயல்படும். நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்.

ஆகாஷ் முத்திரை

நமது பெருவிரல் நுனியும் நடு விரல் நுனியும் தொடும்படியும், மற்ற விரல்கள் நேராக நீட்டியும் வைத்துக்கொள்ள வேண்டும்.

akash-mudra
akash-mudra
பயன்கள்

சைனஸ் தொந்தரவு, தலைவலி, காது வலிகளை குணப்படுத்தும். நெஞ்சுப்படபடப்பை குறைக்கும்.கல்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும்.இந்த முத்திரையை தினமும் 45 நிமிடங்கள் அல்லது குறைந்தது 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத்தரும்.காலை 2 மணிமுதல் 6 மணிக்குள் எந்த நேரத்தில் செய்தாலும் அதிக பலன் தரும். இந்த முத்திரையை அமர்ந்திருந்து மட்டுமே செய்தல் வேண்டும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியல் ரெடி., தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால், இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. இந்த நிலையில் கடந்த 2...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -