ஏமாற்றிய மெஸ்ஸி-எம்பாப்பே கூட்டணி…, தோல்வி அடைந்தாலும் முதலிடத்தை தக்க வைத்த PSG!!

0
ஏமாற்றிய மெஸ்ஸி-எம்பாப்பே கூட்டணி..., தோல்வி அடைந்தாலும் முதலிடத்தை தக்க வைத்த PSG!!
ஏமாற்றிய மெஸ்ஸி-எம்பாப்பே கூட்டணி..., தோல்வி அடைந்தாலும் முதலிடத்தை தக்க வைத்த PSG!!

கால்பந்து போட்டிக்கான லீக் ஒன் தொடரில், ரென்ஸ் அணியிடம், PSG அணியின் மெஸ்ஸி-எம்பாப்பே கூட்டணி ஒரு கோல் கூட போடாமல் தோல்வியை தழுவி உள்ளது.

லீக் ஒன்

லீக் ஒன் என்ற பெயரில், உலகில் உள்ள பிரபல கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே பிரான்ஸில் கால்பந்து தொடர் நடந்த பட்டு வருகிறது. இந்த தொடரில், நடப்பு சாம்பியனான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியில், கால்பந்து நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, நெய்மர், கைலியன் எம்பாப்பே உள்ளிட்டோர் விளையாடி வருகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த லீக்கில், PSG அணியானது, நேற்று ரென்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில், நெய்மர் காயம் காரணமாக பங்கு பெறவில்லை. இதையடுத்து தொடங்கப்பட்ட இந்த போட்டியில், முதல் பாதியின் கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் ஒரு கோலுக்காக பல முறை முயற்சித்து வந்தனர். இறுதி நேரத்தில் (45′) ரென்ஸ் அணியின் கார்ல் டோகோ ஏகாம்பி கோல் ஒன்றை அடித்து அசத்தினார்.

IND vs AUS 2nd ODI: இந்திய அணியின் தோல்விக்கு பின் உள்ள சாதனைகளின் சில துளிகள் உள்ளே!!

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் PSG அணியானது 1-0 என்ற கோல் கணக்கில் பின் தங்கி இருந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியின் 48வது நிமிடத்திலேயே மீண்டும் ரென்ஸ் அணி வீரர் கோல் அடித்தார். போட்டியின் கடைசி வரை, PSG அணியின் கைலியன் எம்பாப்பே மற்றும் மெஸ்ஸி கூட்டணி ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. ஆனாலும், இதுவரை 28 போட்டிகளில் விளையாடி உள்ள PSG அணி, 21 ல் வெற்றி, 3ல் டிரா மற்றும் 4ல் தோல்வி அடைந்து 66 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here