இறந்ததாக நாடகமாடிய பூனம் பாண்டேவுக்கு வக்கீல் நோட்டீஸ்., நீதிமன்றத்தில் வழக்கு??  சட்ட நடவடிக்கைகள் தீவிரம்!!

0
பாலிவுட் திரையில் கவர்ச்சி  நடிகையாக கலக்கி வருபவர் தான் பூனம் பாண்டே. கடந்த  பிப்ரவரி 2ஆம் தேதி தான்  உயிரிழந்ததாக தனது மேலாளர் மூலம் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். அதாவது கர்ப்ப வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் பிப்ரவரி 3 ஆம் தேதி நான் உயிரோடு தான் இருக்கிறேன் மேலும் கர்ப்ப வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படத்திற்காகத்தான் நான் இறந்ததாக நாடகம் ஆடினேன் எனக் கூறியிருந்தார். இதையடுத்து நெட்டிசன்கள் மற்றும் திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் பூனம் பாண்டேவுக்கு எதிராக கொல்கத்தாவை சேர்ந்த அமித் ராய் என்பவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது பொது மக்களுக்கு மத்தியில் தேவையற்ற பீதியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் விரைவில் பூனம் பாண்டேவுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here