Friday, March 29, 2024

ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்களைத் தடை செய்ய உரிய சட்டம் வர வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!!

Must Read

ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்களைத் தடை செய்ய மத்திய,மாநில அரசுகளால் உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது

சீட்டு விளையாட்டும்,கைது நடவடிக்கையும்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த சிலுவை என்பவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் நண்பர்களுடன் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் மீது கூடங்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். வனிதா பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?! பயில்வான் ரங்கநாதன் ஆவேசம்!!

மேலும் பொது இடங்களிலோ, நடைபாதையிலோ சீட்டு விளையாடினால் தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

நீதிபதி உத்தரவு

இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் 2003-ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டது. இதன் மூலம் பல்வேறு தற்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளது.

இதே போல இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

பணமே பிரதானம்

ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி உள்ளிட்ட பல்வேறு சீட்டு விளையாட்டுகள் பணத்தை மையமாக வைத்து நடைபெறுகின்றன. இதில் அதிகமாக பணம் சூறையாடப்பட்கிறது.

இது குறிப்பாக வேலையில்லா இளைஞர்களின் நேரத்தையும், அவர்களின் சிந்திக்கும் திறனையும் கெடுக்கிறது. மேலும் இது சமுதாயத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.எனவே தமிழக அரசும், மத்திய அரசும் இது போன்ற ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளைத் தடை செய்வதற்கு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்பது நீதிமன்றத்தின் கருத்து.

மேலும் தெலுங்கானாவில் தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல் இந்தியா முழுவதும் தடை செய்ய சட்டத்தை இயற்ற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது நீதிமன்றம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -