Friday, April 19, 2024

அக்டோபர் 7 ஆம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Must Read

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் கடந்த 7 தேதி முதல் துவங்கி இருந்த நிலையில் தற்போது வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் கொரோனா என்று நோய் தொற்று பரவியது. இந்த பரவல் அச்சம் காரணமாக மத்திய அரசு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொது போக்குவரத்தாக கருதப்படும் ரயில்வே சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் மக்கள் அதிகமாக கூடுவது தவிர்க்கப்படும் என்று நம்பப்பட்டது. ஆனால், சரக்கு ரயில்கள் எந்த வித தடையுமின்றி செயல்பட்டு வந்தது. கொரோனா அச்சம் காரணமாக வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

விரும்பிய காதலே வாழ்க்கை துணையாக அமைய வேண்டுமா?? எளிய பரிகாரங்கள் இதோ!!

படிப்படியாக கொரோனா பரவல் குறைந்ததால் ரயில் சேவைகள் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்தது. மக்கள் கொரோனா தடுப்பு பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டார்கள். தற்போது, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் புறநகர் மின்சார சேவை தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான தகவல்கள்:

இது குறித்து மேலும் கூறப்பட்டதாவது,

  • கொரோனா பொது முடக்கத்திற்கு முன் 450 புறநகர் ரயில்கள் செயல்பாட்டில் இருந்தது. ஆனால், இனி 300 ரயில்கள் மட்டுமே செயல்படும்.
  • இந்த சேவைகள் குறித்த கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவாக அறிவிக்கப்படும்.
  • இது செயல்பட போகும் திட்டம் குறித்த தகவல்கள் தயாராகி வருகின்றது.
  • 100 சதவீத பணியாளர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும். சுழற்சி முறை எதுவும் கிடையாது.

இந்த சேவைகளை தமிழக அரசு கண்டிப்பாக வரவேற்கும் என்று தெற்கு ரயில்வே துறை கூறியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -