மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் மட்டன் சாப் கறி… இந்த சண்டே இத செஞ்சு பாருங்க!!!

0

மட்டன் அசைவ உணவுகளில் அதிக சத்து மற்றும் உடலுக்கு வலு தரக்கூடிய ஒன்று. அதாவது ஆட்டின் ஒவ்வொரு பகுதியும் மனிதனின் ஒவ்வொரு உடல் உறுப்புக்கு நன்மை தரக்கூடிய ஒன்று. அதாவது ஆட்டுக்கால் சூப் உடல் நலம் சரி இல்லாதவர்களுக்கு தெம்பு தரும், ஆட்டு குடல் வயிற்று புண்ணை ஆற்றக்கூடியது. இவ்வாறு பல்வேறு விதங்களில் மட்டன் நமக்கு பயனளிக்க கூடிய ஒன்றாக உள்ளது. இந்நிலையில் இந்த பதிவில் மட்டன் சாப் கறி எவ்வாறு செய்வது என்பதை காண்போம்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/2 கிலோ

கெட்டியான தயிர் – 1/2 கப்

அரிசி மாவு – 2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி

மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி

சீரகம் தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் நன்கு சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை ஒரு குக்கரில் போட்டு இஞ்சி பூண்டு விழுது, சிறிது மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக விடவேண்டும். மேலும் மட்டன் சாறு வெளியே போகாமல் தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் கெட்டியான தயிர், அரிசி மாவு, சிறிது மிளகு தூள், மல்லி தூள், சீரகம் தூள், மிளகாய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு தண்ணீர் தேவை என்றால் தெளித்து கொண்டு நன்றாக கிளறி கொள்ளவும்.

அதன் பின்னர்  இந்த கலவையை  மட்டன்  துண்டுகளின் அனைத்து இடங்களிலும் படுமாறு தடவி கொண்டு 10 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி மட்டன் துண்டுகளை ஒன்றின் பின் ஒன்றாக, இரண்டு புறமும் சிவக்க பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். தற்போது சுவையான மட்டன் சாப் கறி ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here