ஆப்பத்திற்கு ஏற்ற சுவையான சிக்கன் மசாலா கறி… ஒரு தடவ இத ட்ரை பண்ணிப்பாருங்க!!!

0
ஆப்பத்திற்கு ஏற்ற சுவையான சிக்கன் மசாலா கறி... ஒரு தடவ இத ட்ரை பண்ணிப்பாருங்க!!!
ஆப்பத்திற்கு ஏற்ற சுவையான சிக்கன் மசாலா கறி... ஒரு தடவ இத ட்ரை பண்ணிப்பாருங்க!!!

நாம் இந்த பதிவில் அசைவ விரும்பிகளை குஷிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருந்து அளிக்கும் ஒரு உணவு வகையை தான் காண உள்ளோம். அதாவது டிபன் வகைகளான இட்லி, தோசை,ஆப்பம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சிக்கன் மசாலா கறியின் செய்முறையை இங்கு பாப்போம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ

சின்ன வெங்காயம் – 10 கிராம்

பச்சை மிளகாய் – 4

தக்காளி – 1

தேங்காய் துருவல் – 1 கப்

மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி

மல்லி தூள் – 4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

பட்டை – 2

கிராம்பு – 2

கடுகு – 1 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி கீரை, புதினா – தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேங்காய் துருவல், பெருஞ்சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்து உள்ள சிக்கன் சேர்த்து கிளறி கொள்ள வேண்டும். அதில் சிறிது இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இதையடுத்து தேவையான அளவு தண்ணீர்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிக்கனை நன்றாக வேக விட வேண்டும்.

ஆப்பத்திற்கு ஏற்ற சுவையான சிக்கன் மசாலா கறி... ஒரு தடவ இத ட்ரை பண்ணிப்பாருங்க!!!

அதன் பின்னர் அதில் அரைத்து வைத்து உள்ள தேங்காய் கலவையை சேர்த்து கொண்டு கொதிக்கவிடவும். அதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்றாக கொதித்து வரும் வேளையில் நறுக்கி வைத்து உள்ள தக்காளிகளை சேர்த்து கொள்ளவும். அதன் பின்னர் கொத்தமல்லி கீரை, புதினா ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். இந்நிலையில் அடுப்பில் இன்னொரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை குழம்புடன் சேர்த்து கொண்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். தற்போது சுவையான சிக்கன் மசாலா கறி ரெடி.

குறிப்பு: இதில் சிக்கனுக்கு பதிலாக மட்டன் அல்லது காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here