தமிழக பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முன் பருவத்தேர்வு நடத்த ஏற்பாடு!

0

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பருவத்தேர்வுக்கு முன்பாக முன் பருவத்தேர்வினை நடத்த பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

முன் பருவத்தேர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் சமச்சீர் கல்வி பாட திட்டத்தை தான் பயின்று வருகின்றனர். இந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்று பருவ தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான முதல் பருவத்தேர்வு வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. அதே போல 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது.

இதனிடையே, மாணவர்கள் அனைவரும் முதல் பருவத் தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளும் வகையில் அலகு தேர்வு என்ற பெயரில் முன் பருவ தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும், இந்த முன் பருவ தேர்வை இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்கள் பள்ளிக்கல்வித்துறையின் சார்பிலேயே தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முன் பருவத்தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அடுத்தகட்ட பயிற்சி வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன் பருவத்தேர்வை மாணவர்கள் பொதுத்தேர்விற்கு தயாராவது போல நினைத்து படிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு முன் பருவ தேர்வை பொது தேர்வு போலவே நடத்த வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here