டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்சின் கடைசி தருணம்.., மகள் வெளியிட்ட கண்ணீர் மல்கும் பதிவு!!

0
டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்சின் கடைசி தருணம்.., மகள் வெளியிட்ட கண்ணீர் மல்கும் பதிவு!!
டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்சின் கடைசி தருணம்.., மகள் வெளியிட்ட கண்ணீர் மல்கும் பதிவு!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் கடைசி போட்டியில் விளையாடுவதால் அவரின் மகள் புகைப்படம் எடுத்த தருணம் வெளியாகியுள்ளது.

அம்மாவும் நானும்!

அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான 40 வயதாகும் செரீனா வில்லியம்ஸ் தற்போது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடி வருகிறார். மேலும் இவர் அண்மையில் இந்த போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியது. இவர் அமெரிக்காவிற்காக பல போட்டிகளில் விளையாடி பல பட்டங்களை வென்றுள்ளார். செரீனா மொத்தம் 39 கிராண்ட் சிலாம் பட்டங்களை தனதாக்கி கொண்டுள்ளார். இதில் ஒற்றையர் பிரிவிற்காக 23 பட்டங்களும், இரட்டை பிரிவிற்காக 14 பட்டங்களும் கலப்பின டென்னிஸ் போட்டியில் 2 பட்டங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் நான்கு கிராண்ட் சிலாம் போட்டிகளான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், அமெரிக்க ஓபன் டென்னிஸ், விம்பிள்டன் ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஆகிய நான்கு பட்டங்களையும் ஒரே நேரத்தில் வென்ற ஐந்தாவது பெண் டென்னிஸ் ஆட்டக்காரர் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் அண்மை காலங்களில் இவரே இச்சாதனையை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒலிம்பிக் தொடரில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளுக்கான தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் இவர் இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருடன் தனது டென்னிஸ் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருகிறார். இதனால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெறும் இடத்திற்கு செரீனாவும், அவரது மகள் ஒலிம்பியாவும் மைதானத்திற்கு வந்துள்ளனர். அப்போது தனது தாயின் கடைசி தருணத்தை மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிஞ்சு மனதுக்குள் எவ்வளவு ஏக்கம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here